HEALTH

ஜோகூர் சட்டமன்றம் கலைப்பு - பிரகடனத்தில் கையெழுத்திட்டார்  சுல்தான் 

22 ஜனவரி 2022, 11:15 AM
ஜோகூர் சட்டமன்றம் கலைப்பு - பிரகடனத்தில் கையெழுத்திட்டார்  சுல்தான் 

ஜோகூர் பாரு, டிச 22- ஜோகூர் மாநிலத்தில் மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மாநில சட்டமன்றத்தை கலைக்கும் பிரகடனத்தில் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இன்று கையெழுத்திட்டார்.

1895 ஆம் ஆண்டு ஜோகூர் மாநில  அமைப்புச் சட்டத்தின் 23வது ஷரத்தின் இரண்டாவது பிரிவின் படி ஜோகூர் மாநில சட்டமன்றம் 22 ஜனவரி 2022 இல் கலைக்கப்படுகிறது என்று தனது பேஸ்புக் பதிவில் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று மாலை 5.00 மணியளவில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ  ஹஸ்னி முகமது சுல்தானை புக்கிட் சீரின் அரண்மனையில் சந்தித்தார். துங்கு மக்கோத்தா ஜோகூர், துஙகு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமும் அப்போது உடனிருந்தார்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.