கோலாலம்பூர், ஜன 9 - கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக மொத்தம் 11 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த மரண எண்ணிக்கை இதுவாகும்.சுகாதார அமைச்சின் கோவிட்நவ் அகப்பக்க பதிவின்படி சிலாங்கூரில் ஆறு மரணங்களும் கிளந்தான், பெர்லிஸ், சபா, சரவாக் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனுடன் சேர்த்து நாட்டில் நேற்று வரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நாட்டில் மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 79 ஆயிரத்து 927 பேர் அல்லது 97.7 சதவீதம் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர். மேலும் 98.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 65 ஆயிரத்து 398 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
12 , முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 65 ஆயிரத்து 273 பேர் அல்லது 87.9 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், 1,241 முதல் டோஸ் தடுப்பூசிகள், 1,086 இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் மற்றும் 122,667 ஊக்கத் தடுப்பூசிகள் என மொத்தம் 124,994 தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று 11 பேர் பலி
9 ஜனவரி 2022, 6:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்
n.pakiya
18 ஆகஸ்ட் 2023

economy
நெல் சாகுபடியில் சிகிஞ்சான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணம்
n.pakiya
22 செப்டெம்பர் 2023

economy
சித்தம், ஹிஜ்ரா கூட்டாக இந்திய தொழில் முனைவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தியது
n.pakiya
7 செப்டெம்பர் 2023

national
மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மெருகூட்ட ஒற்றுமையே அச்சாணி என முழக்கமிட்டார்- பிரதமர்
n.pakiya
30 ஆகஸ்ட் 2023

உங்கள் கருத்து என்ன?




