ECONOMY

சித்தம், ஹிஜ்ரா கூட்டாக இந்திய தொழில் முனைவர்களுக்கு  பயிற்சி பட்டறை நடத்தியது

7 செப்டெம்பர் 2023, 3:56 PM
சித்தம், ஹிஜ்ரா கூட்டாக இந்திய தொழில் முனைவர்களுக்கு  பயிற்சி பட்டறை நடத்தியது

செய்தி. சு.சுப்பையா

காஜாங்.செப்.7-  சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் வியாபாரத்துறையில் வெற்றி நடைப் போட சித்தம், ஹிஜ்ரா ஆகிய இரண்டு அமைப்புகளும்  சிறப்பாக சேவையாற்றி வருகிறது.

சிலாங்கூர் மாநிலம் முழுவதிலிருந்து 37 இந்திய தொழில் முனைவர்கள் தங்களது வியாபாரத்தை எப்படி வெற்றிகரமாக விளம்பரம் செய்வது என்பதற்காக இரண்டு டிக் டாக்  பயிற்சி பட்டறை சிறப்பாக நடத்தியது.

இந்நிகழ்ச்சி  காஜாங் வட்டாரத்தில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடத்தியது. இந்த வரலாற்று பூர்வமான நிகழ்ச்சியை சித்தம் தலைமை நிர்வாகி கெனத் சைம், சிலாங்கூர் மாநில ஹிஜ்ரா நிறுவனத்துடன் இணைந்து நடத்தினார்.

உலகமே தகவல் தொழில்நுட்ப துறையின் வழி வணிகத்தில்  வெற்றி நடை போடுகிறது.  நாமும்  தகவல் தொழில்நுட்ப துறையில் இணைந்து பீடு நடை போட வேண்டும். நமது இளம் வர்த்தகர்கள் தகவல் தொழில் நுட்பத்தை கையாள்வதில் சிறந்து விளங்க வேண்டும். வியாபாரத் துறையில் ஈடுபட்டு பெரும் சவால்களை எதிர் நோக்குவது  என்ற நுட்பங்களை கற்றுக்கொடுக்கும்  பட்டறை நடத்துப்பட்டது.

புதிய தகவல் தொழில் நுட்ப  ஆற்றலுடன் 37 இளம் தொழில் முனைவர்கள் தங்களது வியாபார சந்தையை எப்படி வெற்றிகரமாக விரிவு படுத்துவது, அதிலும் தற்போது உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  டிக் டாக் வழி எப்படி நாம் நம்மை விளம்பர படுத்தி வியாபாரத்துறையில் வெற்றி நடை போடலாம் என்பது குறித்தெல்லாம்  விளக்கும் இந்த 2 நாள் பயிற்சி பட்டறை சிறப்பாக நடந்தது.

இந்த பயிற்சி பட்டறையில் கலந்துக் கொண்ட பெண்கள். அனைவரும் பல்வேறு வியாபாரத்துறையில் ஈடு பட்டுள்ளவர்கள். தையல், காலனி தயாரித்தல், முக அலங்காரம், பொருட்கள் விற்பனை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் பலர் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த ஹிஜ்ராவில் கடன் பெற்று நடத்தி வருகின்றனர்.

சித்தாம் மற்றும் ஹிஜ்ரா அதிகாரிகள் இந்த 2 நாள் பயிற்சியை உடன் இருந்து நடத்தினர். அனைவரும் எப்படி தங்களது வாணிப விளம்பரத்தை காணொளி வாயிலாக தயாரிப்பது  என்ற நுட்பம் இப்பயிற்சி பட்டறையில் கற்றுக் கொடுக்கப் பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.