ECONOMY

நெல் சாகுபடியில் சிகிஞ்சான்  மற்ற மாநிலங்களுக்கு  முன் உதாரணம் 

22 செப்டெம்பர் 2023, 5:07 AM
நெல் சாகுபடியில் சிகிஞ்சான்  மற்ற மாநிலங்களுக்கு  முன் உதாரணம் 

ஷா ஆலம், செப்.22: சிகிஞ்சானின் நெல் சாகுபடி முறை  மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.  அரிசி உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சிகளை  ஒன்று திரட்டி  வருகிறது.

டத்தோ மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி கூறுகையில், சிலாங்கூரில் நெல்  உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 138,903.13 மெட்ரிக் டன்கள், மொத்தம் 6,871 விவசாயிகளை உள்ளடக்கிய 18,061.53 ஹெக்டர்  பரப்பளவில்  நடவு  உள்ளது.

இது  குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அதிக விளைச்சல் கொண்ட சிகிஞ்சானில்  நெல் சாகுபடி முறையை மற்ற மாநிலங்களுக்கும் பரப்பி, அரிசி உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் பாசுமதி அல்லாத வகை அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்ததால்,  இந்த நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை அதிகரித்தது      என்று அமிருடின் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, முழு நாட்டிலும் அரிசி தன்னிறைவு நிலை 62.6 சதவீதமாக உள்ளது, மீதமுள்ளவை வியட்நாம், தாய்லாந்து,  பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

"2021 ஆம் ஆண்டில், மலேசியா 338,863 மெட்ரிக் டன்களை இறக்குமதி செய்தது,  இது நமது  நாட்டின் அனைத்து மககளின் நுகர்வுக்கு  ஈடுசெய்ய ஆண்டுக்கு 2,580,000 மெட்ரிக் டன் அரிசி தேவையில் 13.13 சதவீதமாகும்" என்று அவர் கூறினார்.

ஜூலை மாதம்,  வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு வானிலை காரணிகளால் உள்ளூர்  அரிசி விநியோகத்தில் பற்றாக்குறை இருப்பதாக ஒப்புக்கொண்டார்.  பொருத்தமற்ற காலநிலை அரிசியின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, பிரதான உணவு விநியோகத்தையும் சீர்குலைப்பதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.