ஷா ஆலம் டிச 28 - மாநில அளவிலான 2022 புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாகவும் தஹ்லீல் விழா, துஹா ஓதும் நிகழ்வு மற்றும் ஜிகிர் முனாஜாத் ஆகியவற்றை அரசு ஏற்பாடு செய்யும் என்று அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சிகளை ஜாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.
தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளன என்றார் அவர்.
நேற்று, சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வெள்ள நிலைமை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அமிருதீன் கூறினார்.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் சிலாங்கூர் மாநிலத்தில் 40,000 க்கும் மேற்பட்டோரை பாதித்ததாக அமிருடின் கூறினார்.
ECONOMY
2022 புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து- மாநில அரசு முடிவு
28 டிசம்பர் 2021, 4:50 AM
தொடர்புடைய செய்திகள்
national
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்
n.pakiya
18 ஆகஸ்ட் 2023

economy
சித்தம், ஹிஜ்ரா கூட்டாக இந்திய தொழில் முனைவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தியது
n.pakiya
7 செப்டெம்பர் 2023

national
மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மெருகூட்ட ஒற்றுமையே அச்சாணி என முழக்கமிட்டார்- பிரதமர்
n.pakiya
30 ஆகஸ்ட் 2023

health
கிள்ளான் மருத்துவமனையில் தீவிபத்து- பாதுகாப்பு அம்சங்கள் மீது விரிவான சோதனை
n.pakiya
23 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




