ECONOMY

சிலாங்கூரின் எட்டு மாவட்டங்களில் அடை மழை தொடரும்- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

18 டிசம்பர் 2021, 9:22 AM
சிலாங்கூரின் எட்டு மாவட்டங்களில் அடை மழை தொடரும்- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 18- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள  எட்டு மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என்ற சிவப்பு மண்டல எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட், உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் மிகவும் கனத்த மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

கோலாலம்பூரிலும் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங்கிலும் இதே போன்ற நிலை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

சிலாங்கூரில் மட்டுமின்றி, கெடா, பேராக், பகாங், கிளந்தான், திரங்கானு, புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களுக்கும் கடுமையான மழை அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.