ஷா ஆலம், டிச 14 - சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடீன் ஷாரி தனது குடும்பத்தினருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.தன் மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமது மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் நோய்த் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அமிருடின் பி.சி.ஆர். சோதனையை மேற்கொண்டார், அதில் நோய்க்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இருப்பினும், இரண்டாவது பி.சி.ஆர். சோதனை முடிவுக்காக வரும் வியாழக்கிழமை வரை காத்திருக்கும் நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு என்னை உட்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் ஆகக் கடைசி நிலவரங்களை உங்களுக்கு வழங்குவேன் என்று அவர் ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறினார்.
இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், தன் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் மன வலிமைக்கும் பிரார்த்தனை செய்யும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
HEALTH
மந்திரி புசாரின் மனைவி, பிள்ளைகளுக்கு கோவிட்-19 உறுதி: தனிமைப்படுத்திக் கொண்டார் அமிருடின்
14 டிசம்பர் 2021, 11:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

selangor
இலவச மருத்துவப் பரிசோதனை நாளை சுபாங் ஜெயாவில் நடைபெறும் - பொதுமக்களுக்கு அழைப்பு
Shalini Rajamogun
5 ஜூன் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



