HEALTH

கோவிட்-19 : ஸ்தாபாக் போலீஸ் நிலையம் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகிறது

5 டிசம்பர் 2021, 5:38 AM
கோவிட்-19 : ஸ்தாபாக் போலீஸ் நிலையம் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகிறது

கோலாலம்பூர், டிச 5- போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டதைத் தொடர்ந்து ஸ்தாபாக் போலீஸ் நிலையம் வரும் வெள்ளிக்கிழமை வரை  தற்காலிமாக மூடப்படுகிறது.

பெர்மிட் விண்ணப்பம் உள்ளிட்ட அலுவல்களை கொண்டிருப்பவர்கள் வங்சா மாஜு போலீஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட இதர நிலையங்களுக்கு செல்லும்படி வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அஷாரி அபு சமா கூறினார்.

அந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிளில் ரோந்துப் பணிகள் மற்றும் குற்றத் தடுப்பு போன்ற இதர நடவடிக்கைகள் ரோந்து வாகனப் பிரிவு, மோட்டார் சைக்கிள் பிரிவு வாயிலாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஸ்தாபாக் போலீஸ் நிலையத்தின் அதிகாரத்திற்குபட்ட பகுகளில் உள்ளவர்கள் உதவிக்கு 03-928992222 என்ற என்ற ஹோட்லைன் தொலைபேசி எண்களில் அல்லது 03-21159999 என்ற எண்களில் அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.