ஜாசின், நவ15- மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்களிப்பின் போது நிலையான வழிகாட்டு நெறிமுறையின் (எஸ்.ஓ.பி.) ஒரு பகுதியாக நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ள வாக்காளர்களின் விரல்களில் மை தடவ சிறப்பு தூரிகை பயன்படுத்தப்படும்.குறிப்பாக, 37.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உடல் வெப்பநிலை, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட வாக்காளர்களுக்கு இத்தகைய பிரத்தியேக பிரஷ் பயன்படுத்தப்படும் என்று அசஹான் தொகுதிக்கான தேர்தல் சிறப்பு அதிகாரி லுக்மானுல் ஹக்கிம் முகமது இட்ரிஸ் கூறினார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள எஸ்.ஓ.பி. விதிமுறைப்படி வாக்களித்ததற்கான அடையாளமாக வாக்காளர்களின் விரல்களை சிறப்பு மையில் நனைப்போம். மேலும், ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் கையுறைகள் மற்றும் முகக் கவசம் அணிந்திருப்பர் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், வாக்காளர்களுக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் சம்பந்தப்ட்ட நபர் ஒரு சிறப்பு கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தூரிகையை பயன்படுத்தி வாக்காளர்களின் விரல்களில் மை பூசுவோம் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
வாக்குச் சீட்டுகள் சிறப்பு பிளாஸ்டிக்கில்சுற்றப்பட்டு வாக்குப்பெட்டியில் வைக்கப்படுவதற்கு முன்பு கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றார் அவர்.
சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் சிறப்பு கூடாரத்தில் உள்ள ஊழியர்கள் விஷேச பாதுகாப்பு ஆடைகளை அணிவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, வாக்குச் சாவடியில் நெரிசலைத் தவிர்க்க குறிப்பிட்ட நேரத்தில் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களை அவர் அறிவுறுத்தினார்.
HEALTH
நோய் தொற்று அறிகுறி உள்ள வாக்காளர்களுக்கு மை தடவ சிறப்புத் தூரிகை
15 நவம்பர் 2021, 11:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
மலேசியாவின் ஏற்பாட்டில் 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
Bernama
2 செப்டெம்பர் 2026

national
தாதியர் பற்றாக்குறை நெருக்கடி: தீர்வு காண 3 திட்டங்களை வகுத்தது சுகாதார அமைச்சு
Bernama
15 ஆகஸ்ட் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



