MEDIA STATEMENT

மேரு தொகுதியில் 1,253 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

10 நவம்பர் 2021, 10:15 AM
மேரு தொகுதியில் 1,253 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், நவ 10- மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தில் பதிந்து கொண்ட மேரு தொகுதி மக்கள் இன்று தொடங்கி 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இம்மாதம் பிறந்த தினத்தை கொண்டாடக்கூடிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட 1,253 பேருக்கு இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

காப்பார், எக்கோன்சேவ் பேரங்காடியில் இந்த பற்றுச் சீட்டைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவோருக்கு சிறிய அன்பளிப்பாகவும் அவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் வகையிலும் இந்த உதவித் திட்டம் அமைந்துள்ளது என்றார் அவர்.

இதனிடையே, கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் இதுவ குறைந்த வருமானம் பெறும் சுமார் 5,000 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் உதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்காமலிருப்பதை உறுதி செய்ய தொடர்ந்தாற்போல் இந்த உணவு உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.