HEALTH

2.2 கோடி மலேசியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

3 நவம்பர் 2021, 8:55 AM
2.2 கோடி மலேசியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 3- நாட்டில் 2 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 720 பேர் அல்லது 95.7 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று இரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும் 2 கோடியே 28 லட்சத்து 85 ஆயிரத்து 170 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது கூறியது.

நேற்று நாடு முழுவதும் பெரியவர்கள் மற்றும் இளையோர் உள்ளிட்ட 233,142 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 3 லட்சத்து 6 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 56,493 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 407,607 ஆக உயர்ந்துள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.