ECONOMY

மூன்று புதிய ஹிஜ்ரா திட்டங்களுக்கு 8 கோடி வெள்ளி- சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு

29 அக்டோபர் 2021, 10:36 AM
மூன்று புதிய ஹிஜ்ரா திட்டங்களுக்கு 8 கோடி வெள்ளி- சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 29- ஹிஜ்ரா அறவாரியம் மூலம் அமல்படுத்தப்படும் மூன்று புதிய கடனுதவித் திட்டங்களுக்காக சிலாங்கூர் அரசு 8 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் இந்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று திட்டங்களும் இவ்வாண்டிலும் அடுத்தாண்டிலும் அமல்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நடப்பிலுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவோர், விவசாய தொழில் முனைவோர், ரமலான் சந்தை வணிகர்கள், பருவ காலப் பழங்களை விற்பனை செய்வோர் ஆகியோரை இலக்காக கொண்டு இந்த கடனுதவித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் மூலம் சிறு வர்த்தகத் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்ட முடியும் என நம்புகிறோம். பெருந்தொற்று காரணமாக ஆட்டங் கண்ட இத்துறைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.