HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இன்று 6,210 பேர் பாதிப்பு

21 அக்டோபர் 2021, 8:47 AM
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இன்று 6,210 பேர் பாதிப்பு

ஷா ஆலம், அக் 21- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் 6,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 5,516 ஆக இருந்தது.

இன்றைய இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 13 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதனிடையே, நாடு முழுவதும் 145,258 பேருக்கு நேற்று கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவர்களில் 4.28  பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.