HEALTH

நாட்டில் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 90.6 விழுக்காட்டை அடைந்தது

13 அக்டோபர் 2021, 5:58 AM
நாட்டில் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 90.6 விழுக்காட்டை அடைந்தது

கோலாலம்பூர், அக் 13- நாட்டில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 90.6 விழுக்காட்டை எட்டியுள்ளது. நேற்று வரை 2 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரத்து 121 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 94.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 15 ஆயிரத்து 504 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக  சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

நேற்று நாடு முழுவதும் 209,534 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி  பிக் எனப்படும்  தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 60 லட்சத்து 44 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, 12 முதல் 17 வயதுடைய இளையோரில் 370,995 பேர் அல்லது 11.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.  மேலும் 23 லட்சத்து 52 ஆயிரத்து 464 பேர் அல்லது 74.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.