HEALTH

இளையோருக்கான வெ.20 பயணக் கட்டணக் கழிவு நவம்பர் 30 வரை நீட்டிப்பு

2 அக்டோபர் 2021, 9:01 AM
இளையோருக்கான வெ.20 பயணக் கட்டணக் கழிவு நவம்பர் 30 வரை நீட்டிப்பு

ஷா ஆலம், அக் 2- கிராப் மின்-அழைப்பு வாடகைக் காரை பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல இளையோருக்கு வழங்கப்படும் 20 வெள்ளி கட்டணக் கழிவு வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறும் இளையோர் இந்த கட்டணக் கழிவு சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கிராப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சார்பில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.

இதற்கு முன்னர், 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இத்தகைய சலுகையை வழங்கும் திட்டம் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்ட அமலாக்கத்திற்காக கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பின் கீழ் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டம் வயது வரம்பின்றி அனைத்து மாநில மக்களுக்கும விரிவு படுத்தப்படுவதாக மந்திரி புசார் பின்னர் அறிவித்தார்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.