ஷா ஆலம் ஆக, 5- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து 20596 ஆக ஆனது. நேற்றை விட இது சுமார் 777 சம்பவங்கள் அதிகமாகும்.சிலாங்கூரிலும் நோய் கண்டவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு 8,549 ஆனது. கடந்த சனிக்கிழமை முதல் இம்மாநிலத்தில் நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட தரவுகளை பார்க்கையில் சில மாநிலங்களில் நோய்த் தொற்று ஆயிரத்தை தாண்டியதை உணர முடிகிறது.
கோலாலம்பூரில் 2,163 சம்பவங்கள் பதிவான வேளையில் ஜோகூர், கெடா மற்றும் கிளந்தானில் முறையே 1,300, 1,446 மற்றும் 772 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
சபா (1062), பினாங்கு (1022), நெகிரி செம்பிலான் (989), பேராக் (916), பகாங் (426), சரவா (759), மலாக்கா (622), திரங்கானு(501), புத்ரா ஜெயா (50), பெர்லிஸ் (4), லபுவான் (15).
சிலாங்கூரில் ( 8549)பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
HEALTH
கோவிட்-19 நோய்த் தொற்று 20596 ஆக உயர்ந்தது: சிலாங்கூரில் 8,549 தேர்வுகள்
5 ஆகஸ்ட் 2021, 8:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
இல்திசாம் சிலாங்கூர் சுகாதாரத் திட்டம்: 6 மாதங்களில் RM17.15 மில்லியன் செலவு
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



