HEALTH

நாட்டில் 340,043 பேர் நேற்று தடுப்பூசி பெற்றனர்

7 ஜூலை 2021, 1:13 PM
நாட்டில் 340,043 பேர் நேற்று தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், ஜூலை 7- நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பதிவு செய்திருந்த 340,043 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் ஒரே நாளில் மிக அதிகமானோர் தடுப்பூசி பெற்றது இதுவே முன் முறையாகும்.

மொத்தம் 133,286 பேர் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 206,757 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் அடங்கிய மாநிலங்கள் வருமாறு- சிலாங்கூர் (79,998), சரவா (59,269), கோலாலம்பூர், (53,155), பேராக் (20,759), ஜொகூர் (18,431)

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.