HEALTH

பண்டார் பாரு கிள்ளான் தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவ, ஆலோசக சேவை

5 ஜூலை 2021, 10:22 AM
பண்டார் பாரு கிள்ளான் தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவ, ஆலோசக சேவை

ஷா ஆலம், ஜூலை 5- பண்டார் பாரு கிள்ளான் தொகுதி மக்களுக்கு இன்று தொடங்கி வரும் 11 ஆம் தேதி வரை இலவச மருத்துவ மற்றும் ஆலோசக சேவை வழங்கப்படவுள்ளது.

தொகுதியிலுள்ள அனைவருக்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தொகுதி உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

பண்டார் பாரு கிள்ளான் தொகுதி சேவை மையம் மற்றும் கிளினிக் மெடிக் சூரியா ஏற்பாட்டில் இந்த  இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தொகுதி மக்களின் உடலாரோக்கியத்தை பாதுகாக்கும் அதேவேளையில் அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.