NATIONAL

பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு- மந்திரி புசார் வாழ்த்து

22 ஜூன் 2021, 12:09 PM
பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு- மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், ஜூன் 22- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தனது 15ஆம் ஆண்டு நிறைவு தினத்தை இன்று கொண்டாடுகிறது. மாநகர் மன்றம் தொடர்ந்து பீடுநடை போட தாம் வாழ்த்துவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது  கூறியுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநகர் அந்தஸ்தைப் பெற்றதாக அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தொடர்ந்து வெற்றி நடை போடவும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கவும் வாழ்த்துகிறேன் என்று காணொளி வாயிலாக மந்திரி புசார் தெரிவித்தார்.

கடந்த 1952 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெட்டாலிங் ஜெயா நகரம், மேம்பாடு மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் படிப்படியாக பரிணாம வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. நகாரண்மைக் கழக அந்தஸ்தைக் கொண்டிருந்த இந்நகரம் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி மாநகர் அந்தஸ்தை பெற்றது.

தனது 15 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் பி.ஜே.பரிவு, சமூகத்தின் சுபிட்சம் எனும் கருப்பொருளில் பல்வேறு சமூக திட்டங்களை அமல்படுத்தவிருக்கிறது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.