HEALTH

தாமான்  ஸ்ரீ கோம்பாக்கில் நாளை இலவச கோவிட்-29 பரிசோதனை

19 ஜூன் 2021, 3:44 AM
தாமான்  ஸ்ரீ கோம்பாக்கில் நாளை இலவச கோவிட்-29 பரிசோதனை

ஷா ஆலம், ஜூன் 19- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை சுங்கை துவா, கோம்பாக் செத்தியா மற்றும் தாமான் டெம்ப்ளர் தொகுதிகளில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த பரிசோதனை இயக்கம் தாமான் ஸ்ரீ கோம்பாக் டேவான் பெரிங்கினில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் என்று மந்திரி புசார்  வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை இயக்கம் விரைவாகவும் சீராகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலி வாயிலாகவும் https://screening.selangkah.my/login  எனும் அகப்பக்கம் மூலமாகவும் பதிவு செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இரண்டாம் கட்ட பரிசோதனை இயக்கத்தின் போது ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமாக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான தொகுதிகளை இலக்காக கொண்டு மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது.

இந்த பரிசோதனை இயக்கம் வரும் 26ஆம் தேதி காஜாங் தொகுதியிலும் 27 ஆம் தேதி உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாதாரா பங்சா தொகுதியிலும் நடைபெறும்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.