ECONOMY

ஸ்மார்ட் சிலாங்கூர், பி.ஜே. சிட்டி பஸ்களில் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி

24 மே 2021, 1:15 PM
ஸ்மார்ட் சிலாங்கூர், பி.ஜே. சிட்டி பஸ்களில் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி

ஷா ஆலம், மே 24- நாளை தொடங்கும் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தின் போது சிலாங்கூர் அரசின் ஸ்மார்ட் சிலாங்கூர் மற்றும் பி.ஜே. சிட்டி பஸ்களில் 50 விழுக்காட்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக பயணிகளும் பொது மக்களும் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பர்  எனத் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இந்த இலவச பஸ் சேவை  அதிகாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி  வரை மேற்கொள்ளப்படும் எனக்கூறிய அவர், இச்சேவையை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை ஊராட்சி மன்ற அதிகாரிகள் மேற்கொள்வர் என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.