ECONOMY

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் கிருமி நாசினி தெளிப்பு சேவை

18 மே 2021, 4:08 AM
கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் கிருமி நாசினி தெளிப்பு சேவை

ஷா ஆலம், மே 18- கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இலவச கிருமி நாசினி தெளிப்பு சேவையை வழங்க கோத்தா அங்கிரிக் சட்டமன்றத்  தொகுதி முன்வந்துள்ளது.

சமூக அமைப்புகள், சூராவ் மற்றும் பள்ளிகளுக்கு இச்சேவை வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பின நஜ்வான் ஹலிமி கூறினார்.

இந்த இலவச கிருமி நாசினி தெளிப்பு சேவையை நாங்கள் கடந்தாண்டு முதல் மேற்கொண்டு வருகிறோம். இப்பணி தனியார் நிறுவனங்கள் அல்லது தொண்டூழிய அமைப்புகளின் துணையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

ஷா ஆலம், செக்சன் 7 மற்றும் செக்சன் 16இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் செக்சன் 6 இல் உள்ள உயர்கல்விக் கூடம் ஆகியவற்றில் இந்த கிருமி நாசினி தெளிப்பு பணி இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.