ECONOMY

சிலாங்கூரில் இளைஞர்கள் மத்தியில் அறிகுறிகள் இல்லாத நோய்த் தொற்று பரவல்

16 மே 2021, 3:47 AM
சிலாங்கூரில் இளைஞர்கள் மத்தியில் அறிகுறிகள் இல்லாத நோய்த் தொற்று பரவல்

ஷா ஆலம், மே 16- சிலாங்கூரில் 20 முதல் 40 வயது வரையிலான 80 விழுக்காட்டு இளைஞர்கள் மத்தியில் எந்த அறிகுறியையும் கொண்டிராத கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக இந்த உண்மை கண்டறியப்பட்டதாக செல்கேர் எனப்படும் சிலாங்கூர் ஹெல்த் கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

இத்தகைய தரப்பினர் வேலை உள்பட பல்வேறு காரணங்களுக்காக பல இடங்களுக்குச் செல்லக்கூடியவர்களாகவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் உள்ளனர். இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என அவர் சொன்னார்.

கடந்த 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எந்த அறிகுறியும் இன்றி நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 80 விழுக்காட்டினர் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட தரப்பினராவர் என்றார் அவர்.

மாநிலத்திலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 8ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனையில் 8,585 பேர் பங்கேற்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.