ECONOMY

நோன்புப் பெருநாளை முன்னிட்டு உயர்கல்விக்கூட மாணவர்கள் இல்லம் திரும்பத் தொடங்கினர்

8 மே 2021, 6:13 AM
நோன்புப் பெருநாளை முன்னிட்டு உயர்கல்விக்கூட மாணவர்கள் இல்லம் திரும்பத் தொடங்கினர்

கோலாலம்பூர், மே 8-  நோன்புப் பெருநாளை முன்னிட்டு உயர்கல்விக்கூட மாணவர்கள் கட்டங் கட்டமாக இல்லம் திரும்பத் தொடங்கினர்.

நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. நடைமுறைகளைகளுக்கேற்ப மாணவர்களை அனுப்புவதற்கு சம்பந்தப்பட்ட உயர்கல்விக் கூடங்கள் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளன.

உயர்கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகள் வாயிலாக, சொந்த வாகனங்களில் அல்லது பெற்றோர்கள் மூலம் என மூன்று வழிகளில் மாணவர்கள் இல்லம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜோகூரில் உள்ள 1,983  யு.டி.எம்.  மாணவர்கள் எட்டு பேருந்துகள் மூலம் வடக்கு மற்றும் கிழக்குகரை மாநிலங்களுக்கும் ஐந்து பஸ்கள் மூலம் மத்திய பிராந்திய மாநிலங்களுக்கும் நேற்று  பயணமாகினர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.