PBT

செந்தோசா தொகுதியில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு- பாதுகாப்பை அதிகரிக்க குணராஜ் வேண்டுகோள்

6 மே 2021, 12:27 PM
செந்தோசா தொகுதியில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு- பாதுகாப்பை அதிகரிக்க குணராஜ் வேண்டுகோள்

ஷா ஆலம், மே 6- செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கருத்தில் கொண்டு தாமான் செந்தோசாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் கூடுதலான போலீஸ்காரர்களை பணியில் அமர்த்தும்படி தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுமார் 150,000 மக்கள் தொகையைக் கொண்ட அத்தொகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் ஒரே போலீஸ் நிலையம் மட்டும் உள்ள நிலையில் அதில் ஒரு நேரத்தில் மூன்று முதல் நான்கு போலீஸ்காரர்கள் மட்டுமே பணியில் உள்ளதாக கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.

போலீஸ் ரோந்து வாகனத்தை இந்த போலீஸ் நிலையம் கொண்டிராத காரணத்தால் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, இப்பகுதியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவ்விரு விவகாரங்கள் மீதும் கவனம்  தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

செந்தோசா போலீஸ் நிலையத்தில் குறைவான போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்ட போதிலும்  மக்களுக்கு நிறைவான சேவையை வழங்குவதில் அவர்கள் இயன்ற அளவு பங்களிப்பை வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

 

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.