ஷா ஆலம், மே 3- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் சின்னம் வரையும் போட்டியை மாவட்ட மன்றம் நடத்துகிறது. அப்போட்டியில் முதன்மை பரிசாக 3,000 வெள்ளி வரை வெல்வதற்குரிய வாய்ப்பு காத்திருக்கிறது.
மே 3ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும் அப்போட்டியில் மலேசியர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற பொது உறவுப் பிரிவு கூறியது.
இப்போட்டிக்கு நுழைவுக் கட்டணம் விதிக்கப்படவில்லை என்பதோடு போட்டியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சின்னங்களை விண்ணப்பாரங்களோடு இணைத்து அனுப்பலாம் என்றும் அது தெரிவித்தது.
வரும் மே மாதம் 31ஆம் தேதி மாலை மணி 4.00க்குள் விண்ணப்பங்கள் தங்களிடம் வந்து சேர்வதை உறுதி செய்யும்படி போட்டியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளோர்
https://www.mdhs.gov.my/…/pertandingan-mencipta-logo… என்ற இணையத்தளம் வாயிலாக அல்லது https://forms.gle/DFvkYkW98aaH8FMt9 என்ற அகப்பக்கம் வாயிலாக விபரங்களைப் பெறலாம்.








