ECONOMY

11 பணியாளர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று – சுபாங் ஜெயா மாநகர் மன்ற கட்டிடம் மூடப்பட்டது.

3 மே 2021, 4:44 AM
11 பணியாளர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று – சுபாங் ஜெயா மாநகர் மன்ற கட்டிடம் மூடப்பட்டது.

ஷா ஆலம், மே 3- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் 11 பணியாளர்கள் கடந்த ஒரு  வார காலத்தில்   கோவிட்-19 நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டது உறுதி செய்ப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிருமி நானிசி தெளிப்பு நடவடிக்கைக்காக மாநகர் மன்ற தலைமையகக் கட்டிடம் இன்று தொடங்கி மூடப்படுவதாக டத்தோ பண்டார் நோராயினி  ரோஸ்லான் கூறினார்.

மாநகர் மன்றத்தின் சேவை முகப்பிடங்களும்  மே 14 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு கிருமி  நாசினி தெளிக்கும் பணிக்காக மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைக்கேற்ப கோவிட்-19 பரிசோதனை  மேற்கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாநகர் மன்றத்துடனான அலுவல்களை  www.mbsj.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக மேற்கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேல் விபரங்களுக்கு   03-80747700  என்ற எண்களுடன் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்துடன் தொடர்பு கொள்ளலாம். 

இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌர்கர்யங்களுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்  கொள்கிறோம்.  ஆகக் கடைசி நிலவரங்களை நாங்கள் அவ்வப்போது தெரிவித்து வருவோம்.  நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில்  ஒத்துழைப்பு வழங்கும்படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.