SELANGOR

இல்லத்திரசிகள் உற்பத்தி பொருள் கண்காட்சி சனியன்று நடைபெறும்

18 ஏப்ரல் 2021, 10:23 AM
இல்லத்திரசிகள் உற்பத்தி பொருள் கண்காட்சி சனியன்று நடைபெறும்

ஷா ஆலம், ஏப் 18- வரும் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு இயங்கலை வாயிலாக நடைபெறும் இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் உருவான பொருள்களின் கண்காட்சியில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இயங்கலை வாயிலாக பங்கேற்பதன் வாயிலாக புதிய அனுபவத்தை பெறுவதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு ஏற்படும்.

இந்த கண்காட்சியில் இடம் பெறும் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை கைப்பேசியின் வழி பார்ப்பதன் வாயிலாக புதிய அனுபவத்தை பெற முடியும்.

இந்த கண்காட்சியில் இடம் பெறும் 100 வியாபார மையங்கள் இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் உருவான பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர் http://www.expohassel.com எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்று  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

விரும்பும் பொருள்களை வாடிக்கையாளர்கள் இணையம் வழி வாங்கும் பட்சத்தில் அப்பொருள்கள் நேரடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.