PBT

கோல சிலாங்கூரில் நாளை இலவச கோவிட்-19 பரிசோதனை

20 மார்ச் 2021, 4:36 AM
கோல சிலாங்கூரில் நாளை இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மார்ச் 20- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நாளை 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோல சிலாங்கூரில் நடைபெறுகிறது.

இந்த இயக்கம் கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வட்டார மக்கள் குறிப்பாக தாமான் ஸ்ரீ இண்டா,  பெக்கான் பெஸ்தாரி ஜெயா, தாமான் பெலாங்கி, தாமான் கிலாவுவான், தாமான் பஞ்சாரான் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு  கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக screening.selangkah.my. எனும் அகப்பக்கத்தின் மூலம் செலங்கா செயலியில் முன்பதிவு செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் இலவச பரிசோதனை இயக்கங்கள மேற்கொள்ள மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 50,000 பேருக்கு இந்த இலவச பரிசோதனையை மேற்கொள்ள மாநில அரசு இலக்கு வகுத்துள்ளது.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.