ALAM SEKITAR & CUACA

ஷா ஆலம் இடைக்கால டத்தோ பண்டாராக  துணை டத்தோ பண்டார் நியமனம்

20 மார்ச் 2021, 2:43 AM
ஷா ஆலம் இடைக்கால டத்தோ பண்டாராக  துணை டத்தோ பண்டார் நியமனம்

ஷா ஆலம், மார்ச் 19- ஷா ஆலம் மாநகரின் இடைக்கால டத்தோ பண்டாராக துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இந்த நியமனம் வரும் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் டத்தோ பண்டார் ஹரிஸ் காசிமிடமிருந்து முகமது ரஷிடி இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஹரிஸ் காசிம் மாநில நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஷா ஆலம் மாநகர் மன்ற டத்தோ பண்டார் பதவி காலியானது.

ஷா ஆலம் மாநகரை கார்பன் மாசுபாடு குறைந்த நகரமாக உருவாக்கும் தனது இலக்கு வரும் 2035ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்நோக்கத்திற்காக அனைத்துலக நிலையில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தேசிய அளவிலும் பல விருதுகள் பெறப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த பத்தாண்டுகளாக ஷா ஆலம் மாநகரில் தாம் பணியாற்றியதாக கூறிய அவர், மாநகர் மன்ற ஊழியர்கள் வழங்கிய அபரிமித ஒத்துழைப்பு காரணமாக தமது பணியை எளிதாக மேற்கொள்ள முடிந்ததாக சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.