அம்பாங், மார்ச் 8- மக்கள் பிரச்னைகளை கண்டறிந்து களையும் நோக்கிலான சிலாங்கூர் மாநிலச் சுற்றுப்பயணத்தின் அடுத்தக் கட்டமாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி காப்பார் மற்று கோல லங்காட் தொகுதிகளுக்கு விரைவில் வருகை புரியவிருக்கிறார்.
தமக்கு கிடைக்கும் நேரம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அடுத்த பயணம் குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
காப்பார் அல்லது கோல லங்காட் தொகுதிக்கு பயணம் மேற்கொள்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். குறைந்தது வாரத்தில் ஒரு நாள் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் கடுமையானப் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண விரும்புகிறோம் என்று அம்பாங் தொகுதிக்கான பயணத்தின் போது மந்திரி புசார் கூறினார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள லெம்பா ஜெயா மற்றும் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த சனி மாற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் மேற்கொண்டார்.








