ஷா ஆலம், மார்ச் 6- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் நிலையை கருத்தில் கொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.இத்திட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போது தொடக்கக்பட்டதாக அவர் சொன்னார்.
மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தை தொடர்ந்து அமல் படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களையும் உயர் கல்விக்கூட மாணவர்களையும் இத்திட்டத்தில் நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம். ஏனென்றால் அவர்கள்தான் கணினியை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றார் அவர்.
இதுவரை வேறுபாடின்றி பத்து மாணவர்களுக்கு கணினி வழங்கியுள்ளோம். மேலும் நால்வர் அண்மையில் அந்த உதவியை பெற்றுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
உண்மையில் உதவி தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ரவாங் சட்டமன்ற தொகுதி சேவை மையம் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.
PENDIDIKAN
மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும்- ரவாங் சட்டமன்ற உறுப்பினர் உறுதி
5 மார்ச் 2021, 6:15 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
மலேசிய இந்திய மாணவர்கள் சதுரங்க போட்டியில் உலகளவில் சாதனை புரிய இதுபோன்ற போட்டிகள் அவசியம் .
n.pakiya, Shalini Rajamogun
26 ஜூலை 2025

pendidikan
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி
n.pakiya, Shalini Rajamogun
26 ஜூலை 2025

national
ஆர்.பி.என் தேசிய கல்வித் திட்டம் 2026-2035- மலேசியக் கல்வித்துறையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
Mavitthran
23 ஜனவரி 2026

national
ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட கல்வி அமைச்சின் அதிகாரி பணியிடை நீக்கம் - கல்வி அமைச்சு அறிக்கை
Mavitthran
1 டிசம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




