SELANGOR

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட எழுவருக்கு கோத்தா கெமுனிங் தொகுதி சார்பில் நிதியுதவி

14 பிப்ரவரி 2021, 2:58 PM
கடும் நோயினால் பாதிக்கப்பட்ட எழுவருக்கு கோத்தா கெமுனிங் தொகுதி சார்பில் நிதியுதவி

ஆலம், பிப் 14- இங்குள்ள கம்போங் புக்கிட்  லஞ்சோங் பகுதியில் வசிக்கும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட எழுவருக்கு கோத்தா கெமுனிங்  சட்டமன்றத் தொகுதி சார்பில் 3,500 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

சிகிச்சை மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் அந்த எழுவருக்கும் தலா 500 வெள்ளிக்கான காசோலை வழங்கப்பட்டதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

சிறுநீரக செயலிழப்பு நான்காம் கட்ட நிலையில் உள்ளவர்கள், முடத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு காரணமாக கால்களை இழந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வேலையும் வருமானமும் இல்லாத நிலையில் அவர்களின் வாழ்க்கை வறுமை நிறைந்ததாக காணப்படுகிறது. அவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் இந்த உதவியை வழங்க முன்வந்தோம் என்றார் அவர்.

ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் முகமது தர்மிஸி லாஸிம், கணபதிராவ் சார்பில் இந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார்.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.