SELANGOR

வசதி குறைந்தவர்களுக்கு புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் உதவி

14 பிப்ரவரி 2021, 9:54 AM
வசதி குறைந்தவர்களுக்கு புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் உதவி

ஷா ஆலம், பிப் 14- புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்தவர்களுக்கு சியாரா காசே திட்டத்தின் கீழ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதவிகளை வழங்கினார்.

தாமான் கோல சிலாங்கூர் உத்தாமா மற்றும் தஞ்சோங் கிராமாட்டைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு சக்கர நாற்காலிகளை ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி நேற்று ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வின் போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் ஆறு பிள்ளைகளுக்குத் தாயான ஒரு பெண்மணிக்கும் உதவி வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான பால் மாவு மற்றும் சமையல் பொருள்களை அம்மாதுவுக்கு ஜூவாய்ரியா வழங்கினார்.

மேலும், தனது தொகுதியிலுள்ள மதுரை வீரன் ஆலயத்திற்கும் ஜெனரேட்டர் கருவியை அவர் ஒப்படைத்தார்.

இந்த உதவி சம்பந்தப்பட்டவர்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்க உதவும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகைyb activities

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.