ஷா ஆலம், பிப் 4- பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 அமல்படுத்தப்பட்டது முதல் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள வீடமைப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 90 விழுக்காடு அதிகரித்துள்ளது.வீடுகளில் சமைப்பது மற்றும் இணையம் வாயிலாக உணவுகளை வாங்குவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக வீடுகளில் சேரும் குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளதாக கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
முந்தைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் வீடுகளிலிருந்து 70 விழுக்காட்டு குப்பைகளும் வியாபார ஸ்தலங்களிலிருந்து 30 விழுக்காட்டு குப்பைகளும் அகற்றப்பட்டன. இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 5,200 டன் குப்பைகள் அகற்றப்பட்டன என்றார் அவர்.
எனினும், இம்முறை உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படாத காரணத்தால் வர்த்தக பகுதிகளில் 10 விழுக்காட்டு குப்பைகள் மட்டுமே சேர்கின்றன என்றார் அவர்.
வீட்டிலேயே இருக்கும்படி பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டதால் குப்பைகளின் அளவு அதிகரித்தாக கூறிய அவர், இருந்த போதிலும் அட்டவணைக்கேற்ப தாங்கள் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக சொன்னார்.
குப்பைகளின் அளவு அதிகரித்த காரணத்தால் குப்பை லோரிகள் தினசரி இரண்டு முறை பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாளொன்றுக்கு 2,000 முதல் 2,500 வரையிலான வீடுகளில் குப்பைகளை அகற்றும் வகையில் குப்பை லோரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது குப்பைகளின் அளவு அதிகரித்த காரணத்தால் 1,500 வீடுகளில் சேகரித்தாலே லோரி நிரம்பி விடுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
PBT
பொது முடக்க காலத்தில் குப்பைகளின் அளவு 90 விழுக்காடு அதிகரிப்பு
4 பிப்ரவரி 2021, 3:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

selangor
சிலாங்கூர் அரசின் 30% வாடகைத் தள்ளுபடி: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
6 ஜூலை 2026

selangor
ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 சதவீதத் தள்ளுபடி - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



