ECONOMY

ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளுக்கேற்ப இரவுச் சந்தைகள் செயல்படும்

1 பிப்ரவரி 2021, 9:44 AM
ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளுக்கேற்ப இரவுச் சந்தைகள் செயல்படும்

ஷா ஆலம், பிப் 1- ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கேற்ப சிலாங்கூர் மாநிலத்தில் இரவுச் சந்தைகள் (பாசார் மாலாம்) செயல்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மாநிலத்தில் காலைச் சந்தைகளை திறக்கும் விவகாரத்தில் நடப்புச் சூழலுக்கேற்ப ஊராட்சி மன்றங்கள் முடிவெடுத்த அதே அணுகுமுறை இரவுச் சந்தை விஷயத்திலும் கடைபிடிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

சந்தைகளை நிர்வகிக்கும் மற்றும் கண்காணிக்கும் வழிமுறைகள் அந்தந்த ஊராட்சி மன்றங்களின் வசதிக்கேற்ப மாறுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வணிகர்களும் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களும் சீரான செயலாக்க நடைமுறையை எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இரவுச் சந்தைகள் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அரசாங்கம் கடந்த புதன் கிழமை அனுமதி வழங்கியது.

 

 

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.