PENDIDIKAN

பெர்மாத்தாங்-சுங்கை பூரோங்  தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வெ.558,000 ஒதுக்கீடு

6 ஜனவரி 2021, 4:44 AM
பெர்மாத்தாங்-சுங்கை பூரோங்  தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வெ.558,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 6- பெர்மாத்தாங் மற்றும் சுங்கை பூரோங் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு 558,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சமய மற்றும் மஹாட் தாபிஸ் பள்ளிகள் உள்பட  18 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு  345,000 வெள்ளி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனால் அபிடின் கூறினார்.

சுங்கை பூரோங் தொகுதியில் உள்ள 10 பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 213,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

பள்ளிகளின் மேம்பாட்டிற்காக இந்த நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்த மாநில அரசுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், மாணவர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை பள்ளிகள் மேற்கொள்வதற்கு இந்த நிதி துணை புரியும் என தாம் நம்புவதாக சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.