ECONOMY

கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 நோய் தொற்று சோதனை அவசர அவசியம்

21 டிசம்பர் 2020, 8:52 AM
கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 நோய் தொற்று சோதனை  அவசர அவசியம்

ஷா ஆலம், டிச 21: கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (எச்.டி.ஏ.ஆர்) அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 நோய் தொற்று பீடித்திருக்கச் சாத்தியம் இருப்பதால், அனைவரையும் நோய் தொற்று சோதனை செய்வதற்கான அவசர அவசியம் இருப்பதாகச் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நடவடிக்கை குறித்துச் சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறையுடன் (ஜே.கே.என்.எஸ்) முன்கூட்டியே விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

"ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்றார் அவர்.

கிள்ளான் பொது மருத்துவமனையான இதன் அனைத்து ஊழியர்களும் பெரும் ஆபத்தில் இருப்பதால் மாநில அரசு உதவும் நோக்கம் கொண்டுள்ளது. இந் நடவடிக்கையை மாநிலச் சுகாதாரத்துறை ஆட்சேபிக்காது என்று அவர் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் மாநிலக் கிறிஸ்துமஸ் தினம் 2020 கொண்டாட்டத்துடன் இணைந்து நன்கொடை ஒப்படைப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்கிடையில், மாநிலத்தில் கோவிட் -19 இன் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) சிலாங்கூர் அரசாங்கத்தை அணுகலாம் என்ற அவர்.

அப்பொழுது அவர்களிடம் இந்த "வைரஸ் பரவுவதைத் தடுக்க நான் சில பரிந்துரைகளை வழங்குவேன் என்றும் அவர்களின் பரிந்துரைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

"இருப்பினும், பி.கே.பி.டி என்னும் கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டு கட்டுப்பாடு ஆணை அல்லது பி.கே.பி என்னும் நடமாட்டு கட்டுப்பாடு ஆணை என்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து எம்.கே.என் முடிவு செய்யும்" என்றார் அவர்.

நேற்று, ஜே.கே.என்.எஸ் இயக்குனர் டத்தோ டாக்டர் ஷா’ரி நாகடிமான், கிள்ளான் பொது மருத்துவ மனையில் பதிவு செய்யப்பட்ட143 நோய் தொற்று சம்பவங்களில் 62 சுகாதார ஊழியர்களை உள்ளடக்கியது மற்றவை (81) வெளி நோயாளிகள் சம்பந்தப்பட்டதாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.