ALAM SEKITAR & CUACA

நீர் மாசுபாட்டு பிரச்னைக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை

8 டிசம்பர் 2020, 1:11 PM
நீர் மாசுபாட்டு பிரச்னைக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை

ஷா ஆலம், கிள்ளான் டிச 8:- சிலாங்கூர் மாநிலம் எதிர்நோக்கும் நீர் மாசுபாட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விவகாரத்திற்கு 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நீர் மாசுபாடு தொடர்பான 90 விழுக்காட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுவதை மாநில அரசு இலக்காக கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

நீர் விநியோகத் தடை மாநிலத்தில் மிகவும் கடுமையான பிரச்னையாக உள்ளது. இவ்விவகாரத்திற்கு தீர்வு காண நாம் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் அடிப்படையில் அடுத்த ஈராண்டுகளில் பூர்த்தியாக கூடிய திட்டங்களுக்கு நாம் உடனடியாக அனுமதி வழங்கியுள்ளோம் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.