ஷா ஆலம், டிச 6- குர்சி மந்திரி புசார் இன்காப்ரேடட் திட்டத்தின் வாயிலாக அரசுஊழியர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ளவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆய்வு, ஆராய்ச்சி, பொருளாதாரம், நிதி, தொழில் முனைவோர் துறைகளில் அரசு
ஊழியர்கள் ஆற்றலை பெருக்கிக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் இந்
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பத்து மாணவர்களுக்கு மூன்று தவணைகளுக்கு கல்வி கட்டண விலக்களிக்கப்பட்டு மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் வர்த்தக
மற்றும் பொருளாதார பள்ளியில் பயிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தொழில் முனைவோர், நிதி,பொருளாதாரம், வர்த்தக நிர்வாகம் ஆகிய துறைகளில்
உயர் கல்வி மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் முகமது ரோஸ்லான் கூறினார்.
இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி 2021
ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது
அறிவித்தார்.
உயர் கல்வி பெறுவதற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி மாநில அரசு மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
குர்சி எம்.பி.ஐ. திட்டத்தின் வழி பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு
6 டிசம்பர் 2020, 10:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

sukankini
மலேசிய இந்திய மாணவர்கள் சதுரங்க போட்டியில் உலகளவில் சாதனை புரிய இதுபோன்ற போட்டிகள் அவசியம் .
n.pakiya
26 ஜூலை 2025

pendidikan
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி
n.pakiya
26 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



