PBT

சுங்கை துவா சட்டமன்ற தொகுதிக்கு வெ. 100,000 மானியம்- மந்திரி புசார் வழங்கினார்

1 டிசம்பர் 2020, 8:59 AM
சுங்கை துவா சட்டமன்ற தொகுதிக்கு வெ. 100,000 மானியம்- மந்திரி புசார் வழங்கினார்

ஷா ஆலம்,டிசம் 1:- சுங்கை துவா சட்டமன்ற தொகுதிக்கு மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்கினார். இந்த மானியம் 600 தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

செலாயாங் சதுக்கத்தில உள்ள சுங்கை துவா சட்டமன்ற தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு இந்த மானியத்தை அவர் வழங்கினார்.

சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அமிருடின், நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடியதோடு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், ஜாலான் ஸ்ரீ செலாயாங்கில் 0.2 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாக்கி வரும் பொழுது போக்கு மையத்தை பார்வையிட்டார்.

சுமார் ஆறு லட்சம் வெள்ளி செலவிலான இதன் முதல் கட்டப்பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.