ALAM SEKITAR & CUACA

காஜாங் வட்டாரத்தில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டிய 11 லோரிகள் பறிமுதல்

29 நவம்பர் 2020, 3:00 PM
காஜாங் வட்டாரத்தில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டிய 11 லோரிகள் பறிமுதல்

ஷா ஆலம், நவ 29- இம்மாதத்தில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டிய குற்றத்திற்காக 11 லோரிகளை காஜாங் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது.

நகராண்மைக் கழகத்தின் சேவை மற்றும் சுகாதார துறையின் கீழுள்ள சுற்றுச்சூழல் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அந்த லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ஜூல்கிப்ளி காலிட் கூறினார்.

ஜாலான் குவாரி சுங்கை லோங், சுங்கை செராய், உலு லங்காட் ஆகிய பகுதிகளில் மூன்று லோரிகள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய எட்டு லோரிகளும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

இந்த குற்றச் செயல்களை புரிந்த தரப்பினர் மீது 31 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டும் இடங்களின் நுழைவாயில்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த மாதங்களைக் காட்டிலும் குறைந்து காணப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.