ஷா ஆலம், நவ 16- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் சாலையோரங்களில் கைவிடப்பட்ட 782 வாகனங்களை ஷா ஆலம் மாநகர்மன்றம் அகற்றியது.
இக் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக இந்த வாகனங்கள் அகற்றப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
இழுவை வாகனங்கள் மூலம் அகற்றப்பட்ட அந்த கைவிடப்பட்ட வாகனங்கள் செக்சன் யு16, செக்சன் 17, மற்றும் செக்சன் 31 ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள கிடங்குகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணமாக நாளொன்றுக்கு பத்து வெள்ளி வசூலிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
பொதுமக்களுக்கு ஆபத்தும் வாகனமோட்டிகளுக்கு இடையூறும் ஏற்படுவதை
தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
கைவிடப்பட்ட வாகனங்களில் நீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் பரவக்கூடிய வாய்ப்பு
ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வாகனங்களை கண்ட
இடங்களில் கைவிட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
PBT
கைவிடப்பட்ட 782 வாகனங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் அகற்றியது
16 நவம்பர் 2020, 1:28 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

selangor
சிலாங்கூர் அரசின் 30% வாடகைத் தள்ளுபடி: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
6 ஜூலை 2026

selangor
ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 சதவீதத் தள்ளுபடி - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



