ஷா ஆலம், நவ 6- விவசாயம், குப்பைகள் கொட்டுவது, குடியிருப்புகளை அமைப்பது ஆகிய நோக்கங்களுக்காக 1,055.27 ஏக்கர் அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.கோல லங்காட்டில் 353 ஏக்கர் நிலமும் கிள்ளானில் 212.77 ஏக்கர் நிலமும் கோல சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங் மாவட்டத்தில் 100 நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இது தவிர, உலு லங்காட்டில் 84 ஏக்கர் நிலமும் கோம்பாக்கில் 80 ஏக்கர் நிலமும் சிப்பாங்கில் 72 ஏக்கர் நிலமும் உலு சிலாங்கூரில் 50 ஏக்கர் நிலமும் சபாக் பெர்ணமில் 3.5 ஏக்கர் நிலமும் இதே நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.
நில ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக தேசிய நிலச் சட்டத்தின் 452 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம், ஐந்தாண்டு வரையிலான சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மேரு உறுப்பினர் முகமது பக்ருள்ரஸி முகமது மொக்தார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது மந்திரி புசார் இதனை சொன்னார்.
ஆற்றுத் தூய்மைக்கேட்டை கண்டறிவதற்கு டிரோன் சாதனத்தை பயன்படுத்தும் போது ஆற்றோரங்களில் நில ஆக்கிரமிப்புகளும் கண்டறியப்பட்டன என்றார் அவர்.
PBT
1,000 ஏக்கர் அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு- மந்திரி புசார் தகவல்
6 நவம்பர் 2020, 10:01 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

selangor
சிலாங்கூர் அரசின் 30% வாடகைத் தள்ளுபடி: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
6 ஜூலை 2026

selangor
ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 சதவீதத் தள்ளுபடி - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



