புத்ரா ஜெயா, நவ 6- அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊராட்சி மன்ற கூட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.தொடக்கமாக சிலாங்கூர் மற்றும் கூட்டசு பிரதேசத்தில் உள்ள 17 ஊராட்சி மன்றங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூராய்டா கமாருடின் கூறினார்.
நாடாளுமன்றத்தைப் போல் தாங்கள் நடத்தும் கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்ப ஒப்புக் கொண்டதன் மூலம் தங்களின் துணிச்சலையும் முன்னோக்கிச் செல்லும் ஆற்றலையும் ஊராட்சி மன்றங்கள் புலப்படுத்தியுள்ளன என்றார் அவர்.
ஊராட்சி மன்றங்களின் பங்களிப்பு என்ன? விவாதங்கள் எவ்வாறு நடக்கின்றன? வரி செலுத்துவோரின் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள இந்நடவடிக்கை வாய்ப்பினை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
ஊராட்சி மன்றங்களும் நட்சத்திர அந்தஸ்து வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
PBT
ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நேரடி ஒளிபரப்பு- அடுத்தாண்டு அமல்
6 நவம்பர் 2020, 9:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

selangor
சிலாங்கூர் அரசின் 30% வாடகைத் தள்ளுபடி: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
6 ஜூலை 2026

selangor
ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 சதவீதத் தள்ளுபடி - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



