PBT

வாகன நிறுத்தமிட சம்மன்களுக்கு 20 வெள்ளி கழிவு- கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் வழங்குகிறது

3 நவம்பர் 2020, 8:14 AM
வாகன நிறுத்தமிட சம்மன்களுக்கு 20 வெள்ளி கழிவு- கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் வழங்குகிறது

ஷா ஆலம், நவ 3- வாகன நிறுத்துமிட சம்மன்களை இன்னும் செலுத்தாத வாகனமோட்டிகளுக்கு அபராதத் தொகையில் 20 வெள்ளி கழிவு வழங்க கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் முன்வந்துள்ளது.

இம்மாதம் முதல் தேதி தொடங்கிய இந்த சலுகை காலம் இம்மாதம் இறுதி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட மன்றத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

வாகன நிறுத்துமிட கட்டணங்களைச் செலுத்தத் தவறியவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ஒரு  வாய்ப்பினை வழங்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் சம்மன்களுக்கான அபராத தொகையை செலுத்தி விடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த கால அவகாசம் முடிவுக்கு வந்தவுடன் குற்றப்பதிவைக் கொண்டிருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.