ஷா ஆலம், அக் 29- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நூலகங்களும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி வரை மூடப்படும்.நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மாநகர் மன்றம் தெரிவித்தது.
கோத்தா கெமுனிங், அங்கிரிக் வெனிலா நூலகம், செக்சன் யு5 இல் உள்ள அங்கிரிக் மொக்காரா நூலகம் மற்றும் செக்சன் 19இல் உள்ள அங்கிரிக் அராண்டா நூலகம்
ஆகியவையே மூடப்பட்ட அந்த நூலகங்களாகும் என்று அது கூறியது.
நூல்களை இரவல் பெற்றவர்கள் நூலகம் திறக்கப்பட்டவுடன் திரும்ப ஒப்படைக்கலாம்
என்றும் அதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை தடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
PBT
ஷா ஆலம் மாநகர் மன்றத்தால் நிர்வகிக்கப்படும் நூலகங்கள் நவ. 9 வரை மூடப்படும்
29 அக்டோபர் 2020, 11:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

selangor
சிலாங்கூர் அரசின் 30% வாடகைத் தள்ளுபடி: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
6 ஜூலை 2026

selangor
ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 சதவீதத் தள்ளுபடி - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



