ECONOMY

கிள்ளானில் சந்தைகளை மீண்டும் திறக்கக் கோவிட் 19 நோய் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

30 செப்டெம்பர் 2020, 8:19 AM
கிள்ளானில் சந்தைகளை மீண்டும் திறக்கக் கோவிட் 19 நோய் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

கிள்ளான் 30 செப்- கிள்ளானில் கோவிட் 19 நோய் தொற்று மிரட்டல் உள்ளவரை இரவு மற்றும் காலைச் சந்தைகள் (பாசார்) மூடியே இருக்கும். நேற்று இம்மாநிலத்தில் உறுதி படுத்த பட்ட 15 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களில் 3 கிள்ளானில் பீடித்துள்ளது.

அதில் ''சபா பெந்தேங் பி.கே வகை தொற்று'' ஒரு கள்ளக் குடியேறியிடம் தோன்றியுள்ளது,

கிள்ளானில் சந்தைகளை மீண்டும் திறக்க அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிலைமை அணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்றார் கிள்ளான் நகராண்மைக்கழக தலைவர் டாக்டர் அமாட் பட்சில் அமாட்  தாஜூடின்.

நேற்று முன்தினம் சுங்கை பூலோ மருத்துவமனையில் சுகாதார அமைச்சு அடையாளம் கண்ட '' ஜாலான் அபாஸ் வகை தொற்று'' சபா தாவாவ் மற்றும் சம்பூர்ணப் பகுதிகளுக்கு வருகையளித்த ஒரு கணவன் மனைவி ஜோடிக்குத் தொற்றியுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. கிள்ளானில் ஏற்பட்ட பாதிப்புகள் சபாவிலிருந்து வந்தவர்களின் வழி ஏற்பட்டதால், சுகாதார அமைச்சு அதிகக் குழப்பமடையத் தேவை இல்லை என  டாக்டர் அமாட் பட்சில் அமாட்  தாஜூடின் தெரிவித்தார்

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.