PBT

ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை மீண்டும் செயல்பட அனுமதி

5 ஜூன் 2020, 7:27 AM
ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை மீண்டும் செயல்பட அனுமதி

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5:

கடந்த மே மாதத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை பல்வேறு சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நாளை முதல் திறக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் (எம்பிபிஜே) மேயர் டத்தோ முகமட் சாயூதி பாக்கார் தெரிவித்தார். சந்தை திறக்கப்பட உள்ளதால் வணிக நடவடிக்கைகள் எப்போதும் போல இயங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

" எல்லா வியாபாரிகளும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். நிபந்தனைக்குட்பட்ட  நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிபி) கடைபிடிக்க வேண்டும்," என்று தமது அறிக்கையில் முகமட் சாயூதி கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.