PBT

எம்பிபிஜே: முன் வரிசை பணியாளர்களை மதிக்கிறது; உணவுகளை வழங்கியது

12 மே 2020, 1:14 AM
எம்பிபிஜே: முன் வரிசை பணியாளர்களை மதிக்கிறது; உணவுகளை வழங்கியது

ஷா ஆலம், மே 12:

கோவிட் -19 தொற்று நோய் பரவலை தடுக்கும் முயற்சியாக பெட்டாலிங் மாவட்டத்தில் முன் வரிசை பணியாளர்களுக்கு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) நேற்று உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளது. ஜலான் ஓத்மான் பெட்டாலிங் ஜெயா பகுதியில் பணியாற்றும் முன் வரிசை பணியாளர்களுக்கு மேலும்  மரியாதை செலுத்தும் நிமித்தம் இந்த நடவடிக்கை அமைந்ததாக முகநூலில் எம்பிபிஜே தெரிவித்தனர்.

" இந்த பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் முன் வரிசை பணியாளர்களை எம்பிபிஜே மரியாதை செலுத்துகிறது," என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். பிஜே. உணவு வங்கி திட்டத்தின் கீழ் பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் சயுதி பாக்கர் அவர்களால் பெட்டாலிங் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் நிக் எசாமி ​​மொஹமட் பைசல் மற்றும் பெட்டாலிங் மாவட்ட பேரிடர் தலைவர் ஜோஹரி அனுவார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. எம்பிபிஜே துணை செயலாளர் ஷரிபா மர்ஹைனி சையத் அலி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.